தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.. இந்த 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் 4-ம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன..
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது..
குறிப்பாக விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்? விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லை அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது..
இந்த நிலையில் மேற்குவங்காளத்தில் நடைபெற்ற கடைசிக் கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.. அதன்படி தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றும் என்பது NDTV-யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
NDTV கருத்துக்கணிப்பு முடிவுகள் :
திமுக கூட்டணி : 125 – 145
அதிமுக கூட்டணி : 65 – 80
தவெக : 18 – 24
நாம் தமிழர் : 0
Republic கருத்துக் கணிப்பு முடிவுகள் :
திமுக கூட்டணி : 122 – 132 தொகுதிகளில் வெற்றி பெறும்
அதிமுக கூட்டணி : 87- 100 தொகுதிகளில் வெற்றி பெறும்
தவெக : 10 – 12 தொகுதிகளில் வெற்றி பெறும்
நாம் தமிழர் : 0
அக்னி கருத்துக் கணிப்பு முடிவுகள் :
திமுக கூட்டணி 169
அதிமுக கூட்டணி – 64
தவெக – 01
நாதக – 0
சாணக்யா கருத்துக் கணிப்பு முடிவுகள் :
திமுக கூட்டணி : 145 – 160
அதிமுக கூட்டணி : 50 – 65
தவெக : 13 – 18
நாம் தமிழர் : 05-08
மின்னம்பலம் கருத்துக் கணிப்பு முடிவுகள் :
திமுக கூட்டணி : 155
அதிமுக கூட்டணி : 72
தவெக : 05
நாம் தமிழர் : 0
Matrize கருத்துக்கணிப்பு முடிவுகள்
திமுக – 122-132
அதிமுக – 87 – 100
தவெக – 12 – 16
நாதக – 01-06
Read More : 2026 தேர்தலில் தவெக வெற்றி பெறுமா..? விஜய் முதல்வர் ஆவாரா? பிரபல ஜோதிடரின் கணிப்பு..!



