fbpx

PM Modi: தூத்துக்குடியில் ரூ.17,000 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டம்…! பிரதமர் மோடி இன்று தொடக்கம்…!

தூத்துக்குடியில் ரூ.17,000 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17,000 கோடி மதிப்பிலான 36 உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே அமைச்சகங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இத்திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளன.

இதுகுறித்து விளக்கிய அமைச்சர் சோனாவால், வ.உ.சி துறைமுகத்தில் ரூ.7,056 கோடி மதிப்பிலான வெளி துறைமுக கொள்கலன் முனைய திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவின் முன்னோடி பசுமை ஹைட்ரஜன் மையமாக வ.உ.சி துறைமுகத்தை பிரதமர் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேறும் வகையில், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலையும் பிரதமர் அர்ப்பணிக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

English Summary: Prime Minister Narendra Modi to Unveil Game-Changing Projects worth more than Rs.17,000 Crore tomorrow from Tuticorin

Vignesh

Next Post

RIP: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் காலமானார்!…

Wed Feb 28 , 2024
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கை தமிழர் சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். […]

You May Like