fbpx

அதிமுக முன்னாள் MLA சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!! காரணமே வேறயாம்..!!

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். இவர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். என்ன காரணம் என்று விசாரித்தால், சத்யா மீது புகார் இல்லையாம். காரணமே அவரது கணவர் தானாம். ஆம், முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவின் கணவர் நகராட்சித் தலைவராக பதவி வகித்த போது, அவர் மீது சுமத்தப்பட்ட புகார் இன்று ரெய்டில் வந்து முடிந்துள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல் ஏ. சத்யா பன்னீர் செல்வத்தின் கணவர் பன்னீர் செல்வம் கடந்த 2011 – 16 இடைப்பட்ட அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சித் தலைவராக பதவி வகித்தார். அப்போது நகராட்சி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், முன்னாள் பண்ருட்டி நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.ரூ.20 லட்சம் டெண்டர் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவான நிலையில் இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

பண்ருட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உட்பட 4 இடங்கள், சென்னையில் உள்ள பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாளின் இடம் என மொத்தம் 5 இடங்களில் சோதனை தொடர்ந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : AIADMK ex-MLA Satya’s house raided by anti-corruption department

Read More : CUET – UG நுழைவுத் தேர்வு..!! விண்ணப்பம் தொடக்கம்..!! தேர்வு தேதி, பாடத்திட்டம் அறிவிப்பு..!!

Chella

Next Post

9,827 கிமீ..!! அனல் பறந்த பாதயாத்திரை..!! இது ஒரு வாழ்நாள் அனுபவம்..!! Annamalai பெருமிதம்..!!

Wed Feb 28 , 2024
ஊழலுக்கு எதிராகவும், மோடியை மூன்றாவது முறையாகவும் பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த பயணத்தின் போது தொகுதி வாரியாக அண்ணாமலைக்கு பாஜக, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் […]

You May Like