மக்களால் நிராகப்பட்டவர்களுடன் துணை நிற்க வேண்டுமா..? மீண்டும் திமுக சீண்டிய மாணிக்கம் தாகூர்..!

manickam tagore stalin

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும்  எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது.. 


இந்த சூழலில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. குறிப்பாக அமைச்சரவையில் பங்கு என்ற கோரிக்கை உடன் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது.. இதுகுறித்த அறிவிப்பை இன்று காங்கிரஸ் பொறுப்பாளர் வெளியிட உள்ளார்..

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை சீண்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.. அதில் ” தீர்ப்பு திமுக அரசுக்கு எதிராக வந்துள்ளது. அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் பாதிப் பேர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். எங்கள் தரப்பில் எவ்விதத் தவறும் இல்லாத நிலையிலும், நாங்கள் எதிர்பாராத பாதிப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.

இப்போது, ​​பாஜக தமிழ்நாட்டின் மீது தன் பார்வையைச் செலுத்தி வருகிறது. நமக்கு முன்னால் உள்ள கேள்வி மிகத் தெளிவானது: மக்களின் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் நாம் துணை நிற்க வேண்டுமா? அல்லது, பாஜகவை எதிர்த்துப் போராடிய சக்தியுடன் இணைந்து, பாஜக தமிழ்நாட்டை ஆள்வதைத் தடுப்பதற்காக நாம் போராட வேண்டுமா?” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

செயல்படாத வங்கிக் கணக்குகளின் பேலன்ஸை சரிபார்ப்பது எப்படி..? இந்த ஒரே இணையதளம் மூலம் உங்கள் பணி எளிதாகும்..!

Wed May 6 , 2026
ஒரு வங்கிக் கணக்கில் சில ஆண்டுகளுக்கு எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாமல் விட்டுவிட்டால், அது தானாகவே ‘செயலற்ற கணக்கு’ (Inactive Account) ஆக மாறிவிடும். இக்காலகட்டத்தில், உங்களால் அந்தக் கணக்கைப் பயன்படுத்த இயலாது; ஒரு செயலற்ற கணக்கிலிருந்து எந்தவொரு பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியாது. இருப்பினும், அந்தக் கணக்கில் உள்ள பணம் எங்கும் சென்றுவிடாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த நிதி உங்கள் கணக்கிலேயே பத்திரமாக இருக்கும். இத்தகைய கணக்குகளில் உள்ள பணத்தை […]
bank account 2

You May Like