தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.. தவெகவின் நிர்வாகிகள் நேரடியாகவும் சென்று ஆதரவு கோரினர்..
இந்த நிலையில் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.. தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி உள்ளது.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காமல் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது..
திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் 2 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் நிலையில், தற்போது அவர்கள் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதால் தவெகவின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது.. இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.. இதனால் தவெக பலம் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது.. தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவை..



