புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்டாலின்..!

Stalin vs Vijay 2026

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..


தவெகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு வழங்கி உள்ளனர்..  தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. விஜய் ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகிறது..

இந்த நிலையில், புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் ” தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.

இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!

இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” னஎன்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

மேற்கு வங்கத்தின் 9-வது முதலமைச்சராகும் சுவேந்து அதிகாரி..! யார் இவர்..?

Fri May 8 , 2026
சமீபத்தில் நிறைவடைந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய தேர்தலிலும் ‘பெரும் தலைவர்களை வீழ்த்தும் வீரராக’ (Giant Slayer) உருவெடுத்த சுவேந்து அதிகாரி, இன்று பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து மேற்குவங்கத்தின் 9வது முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை இவ்விரு தேர்தல்களிலுமே சுவேந்து அதிகாரி வீழ்த்தியுள்ளார்; 2021-இல் நந்திகிராம் தொகுதியிலும், இம்முறை பவானிப்பூர் தொகுதியிலும் அவர் மம்தாவைத் […]
shah suvendu 1778244849 1

You May Like