தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, ஐயுஎம்எல் 2 என தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது.. விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கிடைத்ததால் அவர் நாளை காளை முதல்வராக பதவியேற்கிறார்..
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீர பாண்டியனை சந்தித்து தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்தார்.. சென்னைஅதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம், நிர்வாகிகளுக்கும் தவெக தலைவர் விஜய் நேரில் நன்றி தெரிவித்தார்.. மேலும் சிபிஎம், சிபிஐ மூத்த நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் கலந்துரையாடினார்..



