தவெகவுக்கு ஆதரவு.. சி.வி. சண்முகம் அணி எம்.எல்.ஏக்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

cv shanmugam vijay

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.. மேலும் இபிஎஸ் அணி, சிவி சண்முகம் அணி என அதிமுக 2 பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளது..


சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் குழப்பத்திற்கு விளக்கம் அளித்த சி.வி.சண்முகம், ” அதிமுகவின் தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதிமுகவை காப்பாற்றப்பட வேண்டும். திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளாக அரசியல் செய்கிறோம். தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் எதிர்த்த திமுக உடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக இபிஎஸ் திட்டமிட்டார். அதற்கு நாங்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் முதல்வர் விஜய் சி.வி. சண்ம்கம் அலுவலகத்திற்கு சென்றார்.. அப்போது முதல்வர் விஜய்யை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்..

அப்போது முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்களை சி.வி. சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது எம்.எல்.ஏக்கள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்..

RUPA

Next Post

திருமாவளவனை சந்தித்த முதல்வர் விஜய்..! வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

Tue May 12 , 2026
தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் கடந்த 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் ஆகிய தலைவர்களை […]
vijay thiruma

You May Like