இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், முதல்வர் விஜய் தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது..
தவெக அரசுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.. குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக சிபிஎம், விசிக, காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்தன.. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் உரையாற்றினர்..
அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசிய போது ” இளைஞர்கள் உங்கள் மீதான நம்பிக்கையில் வாக்களித்து உள்ளனர்.. அவர்களை ஏமாற்றக் கூடாது.. ராஜகுருவை அரசு அதிகாரியாக நியமிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டை அரசியல் சிறப்பு அதிகாரியாக நியமித்தது கண்டிக்கத்தக்கது..
குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்.. யார் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தில் சென்றார்கள்..? என்பதையும் முதலமைச்சர் விளக்க வேண்டும்.. வெளிப்படையான ஆட்சியாக இருக்குமென நம்புகிறோம்.. இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும்..



