fbpx

Kanimozhi | தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்கும் கனிமொழி..!!

மக்களவை தேர்தல நெருங்கும் நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என நிறைவு செய்து வேட்பாளரை அறிவிக்கும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. காங்கிரஸ் மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைமை அலுவலகத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிடுபவர்கள் தங்கள் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். மேலும், பலர் தங்கள் விருப்பமானவர்களை தொகுதி சார்பாக முன்மொழிந்து வருகின்றனர்.

இதில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி மீண்டும் அதே தூத்துக்குடியில் போட்டியிட விருப்ப மனுவை அளித்துள்ளார். திமுக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேண்டும் என விருப்ப மனுவை அளித்துள்ளனர்.

Read More : Gold | ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

Chella

Next Post

’நீங்க கேக்குற தொகுதிய நாங்க தர்றோம்’..!! மதிமுகவுக்கு தூதுவிட்ட ADMK..!! எடப்பாடி போட்ட பிளான்..!!

Tue Mar 5 , 2024
தங்கள் கூட்டணிக்கு வந்தால் மதிமுக எதிர்பார்ப்பது போல இரண்டு தொகுதிகளை வழங்கத் தயார் என அதிமுக தரப்பில் தூதுவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கூட்டணியை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் இடம்பெற்ற கட்சிகள் அப்படியே தொடரும் நிலையில், அவற்றிற்கான தொகுதிப் பங்கீடு இன்னும் முடியவில்லை. இந்திய முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு […]

You May Like