நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியலினத்தினர் உள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் அமைச்சரவையில் அதிக பெண்கள் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
33 பேர் கொண்ட அமைச்சரவையில் சென்னையில் மட்டும் 7 எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.. சென்னையில் வெற்றி பெற்ற 14 தவெக எம்.எல்.ஏக்களில் 7 பேர் அமைச்சர்கள் ஆவர்..
ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி), கமலி.எஸ். (அவினாசி), சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சீபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவ் (திருவாடானை), பி.ராஜ்குமார் (கடலூர்),.வி.காந்திராஜ் (அரக்கோணம்),.பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்), கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்), ரமேஷ் (ஸ்ரீரங்கம்), .பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்), ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி), டி.சரத்குமார் (தாம்பரம்), என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்), கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு) உள்ளீட்டோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநித்துவம் இல்லை.. குறிப்பாக தவெக எம்.எல்.ஏக்கள் வென்ற 12 மாவட்டங்களுக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.. மேலும் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத 7 மாவட்டங்களுக்கும் அமைச்சர் பிரதிநித்துவம் இல்லை.. தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற பிராமண சமூகத்தை சேர்ந்த 2 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது..
மொத்தம் உள்ள 33 அமைச்சர்களில் 6 மாவட்டங்களில் இருந்து மட்டும் 20 பேர் அமைச்சர்களாகின்றனர்.. சென்னை 7, நாமக்கல் 3 , கோவை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, மதுரை, ஈரோடு தலா 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்அ உள்ளனர்.. தவெக அமைச்சரவையில் இஸ்லாமியரான அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது..
Read More : CM விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியலினத்தினர் நியமனம்..! 23 அமைச்சர்கள் யார் யார்..?



