fbpx

மீண்டும் MLA ஆகிறார் மாஜி அமைச்சர் பொன்முடி..!! அழைப்பு விடுத்த சட்டப்பேரவை செயலகம்..!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்ம் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. பதவி கேட்டு அணுகலாம் என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும், நீதிமன்றத்தையும் நாடி பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை பெறலாம் என தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையே, சட்டப்பேரவை செயலகத்தை அணுகாமலேயே பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகலாம் என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

Read More : Rajathi Ammal | அதிர்ச்சி..!! ராஜாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் சொன்ன காரணம்..!!

Chella

Next Post

BJP உடன் அமமுக கூட்டணி..!! எத்தனை தொகுதி..? எந்த சின்னத்தில் போட்டி..? டிடிவி தினகரன் அறிவிப்பு..!!

Mon Mar 11 , 2024
பாஜக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை நான் அளித்துள்ளேன். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடனும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனும் இன்று தொலைபேசியில் பேசினோம். கூட்டணியில் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகள் என்ன என்பது ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். கடிதம் மூலமாக கொடுத்துவிட்டோம். தமிழ்நாட்டில் சிறப்பான வெற்றியை பாஜக பெற அம்மா […]

You May Like