பாஜக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை நான் அளித்துள்ளேன். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடனும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனும் இன்று தொலைபேசியில் பேசினோம். கூட்டணியில் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகள் என்ன என்பது ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். கடிதம் மூலமாக கொடுத்துவிட்டோம். தமிழ்நாட்டில் சிறப்பான வெற்றியை பாஜக பெற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அணிலை போல் உதவிகரமாக அமையும்.
எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி என்பது எங்களுக்கு பிரச்சனை கிடையாது. எங்களிடம் எந்த நிர்பந்தத்தையும் பாஜக அளிக்கவில்லை. பாஜக உடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு எந்த உறுத்தலும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில்தான் அமமுக போட்டியிடும்” என்று தெரிவித்தார்.
Read More : மீண்டும் MLA ஆகிறார் மாஜி அமைச்சர் பொன்முடி..!! அழைப்பு விடுத்த சட்டப்பேரவை செயலகம்..!!