பரபரப்பு..! திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்.. பதற வைக்கும் வீடியோ..!

dmk vck clash

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏவாக பொறுப்பு வகிப்பவர் எஸ்.எஸ். சிவசங்கர்.. முன்னாள் அமைச்சரான சிவசங்கர் கடந்த சில நாட்களாக குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.. அந்த வகையில் இன்று மேலமாத்தூர் உடபட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்..


இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூரை சேர்ந்த திமுகவினர் குன்னத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தது.. அப்போது குன்னம் பேருந்து நிலையம் அருகே, குன்னம் தொகுதி விசிக மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையிலானவர்கள் திமுகவினர் வந்த காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது..

ஒருவரை ஒருவர், கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர்.. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

இதுகுறித்து தகவல்றிந்த அங்கு விரைந்த குன்னம் போலீசார் இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.. இதனிடையே மோதல் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. லலித்குமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்..

இதுதொடர்பான நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அமைச்சர் ஆ.ராசா விசிகவை விமர்சனம் செய்தது தொடர்பாக குன்னம் தொகுதி விசிகவினர் கோபம் அடைந்து திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.. இந்த தாக்குதலில் திமுகவினர் தான் அதிகளவு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Read More : மும்மொழிக்கல்வி.. மத்திய அரசின் முடிவுக்கு முதல் முறையாக எதிர்ப்பு தெரிவித்த அண்ணாமலை..! மெகா ட்விஸ்ட்..

RUPA

Next Post

பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. பலர் உயிரிழப்பு.. பெல்ஜியத்தில் சோகம்..!

Tue May 26 , 2026
பெல்ஜியத்தின் புக்கென்ஹவுட் நகரில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் குயின்டின், X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்தச் சம்பவம் குறித்துத் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். “புக்கென்ஹவுட்டில் பள்ளிப் […]
belgium train school bus crash

You May Like