தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்..
மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது.. இதனை தொடர்ந்து கட்சியின் கொறடா மற்றும் சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுக்க இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு வழங்கினர்.
அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ண மூர்த்தியை நியமனம் செய்ய வேண்டும் எனவும் சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பு மனு வழங்கியது.. மறுபுறம், எதிர்தரப்பினர், எஸ்.பி. வேலுமணி சட்டமன்ற குழு தலைவராக வேண்டும், விஜயபாஸ்கரை கொறடா எனவும் மனு வழங்கி இருந்தனர்.. இந்த மனுக்களை ஆய்வு செய்த பின்னர் விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்..
இதனிடையே எஸ்.பி. வேலுமணி மற்றும் இபிஎஸ் தரப்பு சமரசமாக போய்விட்டனர்.. சி.வி. சண்முகம் தவிர, எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர்.. இதையடுத்து எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சபாநாயகரிடம் சென்று தாங்கள் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற கடிதம் கொடுத்தனர்..
மேலும் ஆளுங்கட்சியான தவெக கொடுத்த ஆதரவையும் திரும்ப பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர்.. மறுபுறம் இபிஎஸ் தரபு தவெகவுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கொடுத்த மனுவையும் வாபஸ் பெற்றனர்..
இந்த நிலையில் இரு தரப்பினரும் கொடுத்த மனுக்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேசிய போது, அதிமுகவில் இரு வேறு குழுக்களாக பிரிந்து மனு வழங்கி இருக்கின்றனர்.. ஏற்னவே மனுக்களை வழங்கியவர்கள் சார்பில் மேலும் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.. அவற்றை எல்லாம் சரி பார்த்து, படித்து ஆராய்ந்து ஆய்வு செய்து நாளை காலை அறிவிப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார்..
மேலும் “ அவர்கள் கொடுத்த மனுக்களை சரியாக படிக்க வேண்டும்.. ஏற்கனவே கொடுத்த மனுக்களையும் படித்துவிட்டு தான் முடிவை அறிவிக்க முடியும்.. எனக்கு மனுக்களை படிக்க கால அவகாசம் வேண்டும். நாளை அவர்கள் கொடுத்த மனுக்களுக்கு முடிவை அறிவிப்பேன்.. ஏற்கனவே, கொடுத்த மனுக்கள் ஆய்வில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் மனு கொடுத்துள்ளனர்.. இதை எல்லாம் ஆய்வு செய்து நான் உங்களை அழைத்து முடிவை அறிவிப்பேன்.. ஆனால் அவர்கள் வழங்கிய மனுக்களின் விவரங்களை அவர்கள் தான் சொல்ல வேண்டும்..” என்று தெரிவித்தார்..
சட்டமன்ற குழு தலைவர், கொறடா தேர்வு, தவெகவுக்கு ஆதரவு வழங்கியது ஆகியவற்றை வாபஸ் பெறுவதற்காக புதிய மனுக்களை வழங்கியதாக எஸ்.பி. வேலுமணி தரப்பு கூறியிருக்கின்றனர்.. மறுபுறம், எஸ்.பி.வேலுமணி தரப்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய எடப்பாடி பழனிசாமி மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.. இந்த சூழலில் இதுகுறித்து இன்று சபாநாயகர் என்ன முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..



