fbpx

OPINION POLLS | மீண்டும் மோடி.!! 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக !! வெளியான புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்.!!

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டு கட்டமாக பாராளுமன்ற வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு கருத்துக்கணிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியாகி இருக்கிறது. இதே போல் நியூஸ் 18 செய்தி நிறுவனமும் தனது கருத்து கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி வைக்கும் என்று வெளியாகி இருக்கிறது

வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நியூஸ் 18 செய்தி நிறுவனம் இந்தியா முழுவதிலும் உள்ள 518 பாராளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சம் மக்களிடையே கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த முடிவுகளின் படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என 61% பெரும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என 30% பேரும் வாக்களித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இல்லாமல் புதிய ஆட்சி மலர வேண்டும் என 8% பேர் வாக்களித்து இருக்கின்றனர். இதுவரை நடைபெற்ற அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் மூன்றாவது முறையாக பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று முடிவு வெளியாகி இருக்கிறது.

Next Post

முன்மொழியப்பட்ட டிஜிட்டல் போட்டிச் சட்டம்.! டிஜிட்டல் நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கிறது? முழு விவரம்.!

Thu Mar 14 , 2024
டிஜிட்டல் போட்டி சட்டத்திற்கான வரைவு மசோதா மற்றும் ஆய்வறிக்கையை கார்ப்பரேட் விவகார செயலாளர் மனோஜ் கோவில் தலைமையிலான 16 பேர் கொண்ட குழு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தக் குழு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிஜிட்டல் போட்டி சட்டம் மசோதாவை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த பதிவில் காணலாம். டிஜிட்டல் போட்டி […]

You May Like