பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில், 2021ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது. அப்போது தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது.
அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறிவந்த நிலையில் 600 நாடுகளுக்கு மேல் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தது. அந்தவகையில், சென்னையில் தொடர்ந்து 663-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 விற்கப்படும் நிலையில் ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.94.24 விற்கப்படும் நிலையில் ரூ.92.34 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் மார்ச் 15, 2024, காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு காரணமாக, டீசலில் இயங்கும் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்களின் இயக்க செலவுகளையும்,6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்களின் செலவினங்கள குறைக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.