Flash : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

jewels nn

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.14,600-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : உஷார்..! மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் பாதுகாப்பு குறைபாடு.. பயனர்கள் உடனே இதை செய்ய வேண்டும்.. அரசு எச்சரிக்கை..!

English Summary

In Chennai today, the price of ornamental gold rose by Rs. 800 per sovereign and is being sold at Rs. 1,16,800.

RUPA

Next Post

தேர்தலில் மிகப்பெரிய ஊழல்.. கிரிஷ் சோடங்கரை விசாரிக்கணும்.. காங்கிரஸ் MP ஜோதிமணி பகிரங்க குற்றச்சாட்டு..!

Fri May 29 , 2026
தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவ்வப்போது தனது கருத்துகளை அதிரடியாக வெளியிட்டு வருகிறார்…. திமுக கூட்டணி, தவெக கூட்டணி தொடர்பாக தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், குதிரை பேர அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜோதிமணி கூறியிருந்தார்.. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு […]
jothimani mp congress

You May Like