திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள்.. யாராக இருந்தாலும் நடவடிக்கை என அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..!

minister ramesh thiruchendur

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கோயில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தார்.. பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அவர் அன்னதான உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.. தரிசன ஏற்பாடுகள், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டறிந்தார்..


அன்னதான அலுவலகத்தில் பணிகளை சரிவர செய்யாத பணியாளர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தரக் கோரியும் அமைச்சர் உத்தரவிட்டார்.. அப்போது தரிசன வரிசையில் நின்ற அமைச்சர் ரகசிய ஆய்வு செய்தார்.. சாதாரண உடை அணிந்து, மாஸ்க் அணிந்திருந்த அமைச்சரிடமே விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக அர்ச்சகர்கள் ரூ. 4000 கேட்டுள்ளளனர். ஆனால் தன் கையில் பணம் இல்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறிய நிலையில் ஜிபேயில் அனுப்ப்புங்கள் என்று கூறி வசூல் செய்துள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இதையடுத்து அதிகாரிகள், ஊழியர்களை அழைத்து பணம் கேட்பது தவறு என்று அறிவுறுத்தி இருந்தார்.. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளர்..

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

இந்திய ரூபாய் நோட்டு மாற்றப்பட உள்ளதா? விரைவில் பிளாஸ்டிக் நோட்டுகள்..! RBI-யின் இறுதி முடிவு..?

Fri May 29 , 2026
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் விரைவில் மாறுமா? காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் வருமா? இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து செயல்பட்டு வருகிறதா? ஆம் என்பதே பதில். இது தொடர்பாக தேசிய ஊடகங்களில் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய காகித நோட்டுகளை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகரிக்கிறது. இந்தச் செலவைக் குறைப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பாக […]
rbi 4 1

You May Like