திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கோயில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தார்.. பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அவர் அன்னதான உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.. தரிசன ஏற்பாடுகள், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டறிந்தார்..
அன்னதான அலுவலகத்தில் பணிகளை சரிவர செய்யாத பணியாளர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி தரக் கோரியும் அமைச்சர் உத்தரவிட்டார்.. அப்போது தரிசன வரிசையில் நின்ற அமைச்சர் ரகசிய ஆய்வு செய்தார்.. சாதாரண உடை அணிந்து, மாஸ்க் அணிந்திருந்த அமைச்சரிடமே விஐபி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக அர்ச்சகர்கள் ரூ. 4000 கேட்டுள்ளளனர். ஆனால் தன் கையில் பணம் இல்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறிய நிலையில் ஜிபேயில் அனுப்ப்புங்கள் என்று கூறி வசூல் செய்துள்ளனர்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இதையடுத்து அதிகாரிகள், ஊழியர்களை அழைத்து பணம் கேட்பது தவறு என்று அறிவுறுத்தி இருந்தார்.. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் எச்சரித்திருந்தார்..
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் “ திருச்செந்தூர் முருகன் கோயிலில் முறைகேடு நடப்பதாக பல புகார்கள் வந்தன.. அந்த புகார்களின் அடிப்படையில் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வு செய்யும் போது, பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நேரடியாக தரிசனத்திற்கு அழைத்து செல்வதை கண்டுபிடித்திருக்கிறோம்..
இதில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் என எல்லோரும் சேர்ந்து தான் ஈடுபட்டு வருகின்றனர்.. அவர்கள் யாராக இருந்தாலும் எந்த பாகுபாடும் காட்டாமல் நடவடிக்கை எடுப்போம்.. ஆனால் மன்னிப்பு கடிதம் வாங்கிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர்.. அவர்களிடம் நாங்கள் கேட்டது மன்னிப்பு கடிதம் கிடையாது, விளக்கக் கடிதம் தான்.. எனவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பொய்..
இந்த ஆய்வின் அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும் இல்லாமல், எந்த தயக்கம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.. எல்லா ஆய்வுகளும் முடிந்த பின்னர் ஆய்வறிக்கை தயாரிக்கப்படு, முதல்வரிடம் சமர்ப்பித்து.. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்..
Read More : தேர்தலில் மிகப்பெரிய ஊழல்.. கிரிஷ் சோடங்கரை விசாரிக்கணும்.. காங்கிரஸ் MP ஜோதிமணி பகிரங்க குற்றச்சாட்டு..!



