திருச்சியில் நேற்று தவெக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் தமிழக மக்களுக்கும் திருச்சி மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.. மேலும் திமுக மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை.. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை.. கல்யாண வீட்டில் போய் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்..” என்று திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பேசியிருந்தார்..
முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு திமுக எம்.பி. ஆ.ராசா காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அரசியலமைப்பு ஒழுக்கம் இன்றி முதல்வர் விஜய் உரையாற்றி இருக்கிறார்.. தான் வகிக்கும் பதவிக்கும் பொருத்தமானவராக இல்லாமல், தனது தகுதியை குறைத்துக் கொண்டு பிதற்றி இருக்கிறார்.. வீர வசனம் பேசி இருக்கிறார்.. சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய்யின் குரலுக்கும், திருச்சியில் கர்ஜித்ததாக சொல்லிக்கொண்டு பேசினாரா..? இந்த இரண்டு பேச்சையும் ஒப்பிட்டு பாருங்கள்.. சட்டமன்றத்தில் ஏன் தயக்கம், சோர்வு.. இயலாமை..?
ஆனால் திருச்சியில் ஏன் இந்த வீர வசனம்..? யார் அதை எழுதிக் கொடுத்தார்கள்.. இதை ஒப்பிட்டு பார்த்தால், இதற்கு பின்னால் இருக்கிற அரசியல் தந்திரம், அரசியல் அசிங்கம் எல்லாம் தெரியும்.. ஒவ்வொரு வரிக்கும் திமுகவை குறை சொல்வது, ஸ்டாலின் சார் என்பது, திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி, மற்றவர்கள் எல்லாம் அல்லுசில்லுகள் என்று கூறுவது எல்லாம் முதல்வருக்கு சங்கடமாக இல்லையா..? அந்த அல்லு சில்லுகள் வீட்டுக்கு நீங்களே போய், சால்வை போட்டு அவர்களின் ஓட்டை வாங்கினீர்களே..? அந்த அல்லு சில்லுகளிடம் கெஞ்சி கூத்தாடியது..? தில்லுமுல்லா..? அரசியல் அநாகரிகமா?
அரசியல் புரிதல், கவர்ச்சி அரசியல் போன்ற வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தினா. ‘எனக்கு வாயில நல்லா வந்துரும் ‘ என்று கூறுகிறார்.. என்ன வார்த்தை வரும்.? இது ஒரு முதலமைச்சருக்கு அழகா..? நீங்கள் அரசியலமைப்பு பதவியில் இருக்கிறீர்கள் Bro.. என்று நாங்களும் கேட்போம்..
ஒரு முதல்வராக நன்றி தெரிவிக்கும் போது திமுகவை விமர்சிக்கலாம் என்று நாங்கள் சொல்லவில்லை.. ஒரு தமிழ் தாய் வாழ்த்துக்காக பிரதமரிடம் கெஞ்சினீர்களே..? உங்கள் வீரம் என்ன..? உங்கள் வீரத்தை நாங்கள் அம்பலப்படுத்தக் கூடாதா..? பிரதமர் மோடிக்கு முன்னாள் உங்கள் சக்தி என்னவானது விஜய் Bro..?
உங்கள் ஆட்சி நிர்வாகத்தை தான் 6 மாதம் கழித்து விமர்சிப்போம் என்று சொன்னோம்.. உங்களின் இயலாமையை, குறைபாடுகளை நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.. தினமும் இத்தனை கொலை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்று சொன்னால் அதனை விமர்சனம் என்று கூறுகிறீர்கள்..
நிதி நிலைமை சரி செய்ய கால அவகாசம் தேவை.. சட்டம் ஒழுங்கிற்கு என்ன கால அவகாசம் தேவை..? காவல்துறை உங்களிடம் தானே உள்ளது..? துப்பாக்கி உள்ளது.? அதிகாரம் உள்ளது..? அதை செய்வதில் என்ன பிரச்சனை.
சிங்கப்பெண் திட்டத்தை ஏன் தொடங்கி வைக்கவில்லை.. சிங்கப்பெண் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..? திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது பற்றி பேச முடியாது என்று சொன்னால், எங்களின் மொழியை, இனத்தை சிறுமைப்படுத்தும் ஒருவரை கேள்விக் கேட்க துப்பில்லாத ஒரு சக்தி, எங்களை பார்த்து தீய சக்தி, தூர சக்தி என்று சொல்வீர்களா..? நீங்கள் என்ன நார சக்தியா?”
கச்சத்தீவு, மேகதாது விவகாரம் என எந்த பிரச்சனை பற்றி கேட்டாலும் தவெக அமைச்சர்களின் பதில் நோ கமெண்ட்ஸ் தான்.. முதிர்ச்சி இல்லாத, பக்குவம் இல்லாத தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்து வருகிறீர்கள்.. உங்களுக்கு 35% பேர் ஓட்டு போட்டனர்.. உங்களை வேண்டாம் என்று 65% மக்கள் முடிவெடுத்துள்ளனர்.. என்று தெரிவித்தார்..



