Flash : அலிசா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு.. திருச்சி சிவா அதிரடி கைது..!

alisa trichy siva

பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அதில் “ யூடியூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தன்னை பற்றியும், தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுகின்றனர்.. தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டிருந்தார்.. அவரின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியது..


இந்த நிலையில் இந்த புகாரின் பேரின் திருச்சி சூர்யாவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.. அதே போல் தலைமறைவாக உள்ள முக்தாரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்..

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அலிஷா ஒருகட்டத்தில் கண்கலங்கி பேசினார்.. அப்போது “ எப்போதும் என்னை மட்டுமே குறிவைக்கிறார்கள். இது எனக்கு நல்ல விளம்பரம் தான்.. ஆனாலும் இது எதிர்மறையான விளம்பரம். குழந்தைகள் குறித்து யாரும் தவறாக பேசக்கூடாது. எனக்கு பெற்றோர் மற்றும் கணவர் ஆதரவாக இருந்ததால் நான் உறுதியாக இருக்கிறேன்.

வேறு குடும்பமாக இருந்திருந்தால், இது விவாகரத்து வரை சென்றிருக்கலாம். எனவே, உடனடியாக அந்த காணொளியை நீக்க வேண்டும். இதுதொடர்பாக அவதூறு வழக்கு தொடர்வேன். தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். முக்தார் மற்றும் சூர்யா இருவரையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்று தெரிவித்தார்..

யார் இந்த அலிசா அப்துல்லா..?

பிரபல கார், பைக் ரேசரான அலிசா ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். பிரசவத்திற்காக இவர் கடந்த ஒரு வருடகாலமாக அரசியல் நிகழ்வில் இருந்து விலகி இருந்தார். இந்த சூழலில் தான் அவருக்கு பிறந்த குழந்தை குறித்து மிகவும் மோசமாகவும் இழிவாகவும் பேசி வீடியோ வெளியிட்டதாக, திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது புகாரளித்து இருந்தார்..

RUPA

Next Post

மிகப்பெரிய தள்ளுபடி..! ரூ.48,000 மதிப்புள்ள AC, ரூ.25,000க்கும் குறைவான விலையில்..!

Thu Jun 4 , 2026
ஜூன் மாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், வறண்ட வானிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் கடுமையாகவே உள்ளது. ஒவ்வொரு கோடைக்காலத்திலும், கூலர்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு பலமடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய நேரங்களில், மக்கள் குறைந்த விலையில் ஒரு நல்ல ஏர் கண்டிஷனரை வாங்கத் திட்டமிடுகிறார்கள். இருப்பினும், சிறிய அறைகளைக் கொண்டவர்களுக்கு, 1 டன் திறன் கொண்ட 3-ஸ்டார் ஏர் கண்டிஷனரே போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது Flipkart-இல் […]
air conditioner 1 1

You May Like