அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் நாட்டில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இது ஒரு மத்திய அரசு நிறுவனமாக இருப்பதால், இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு முழுப் பாதுகாப்பு உண்டு.. மேலும், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசு அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாகப் பல சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் முதியோருக்கெனப் பிரத்யேகத் திட்டங்களையும் இது செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு அரசாங்கமே முழுப் பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
மேலும், அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இது உங்களுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரக்கூடியது. அதுமட்டுமின்றி, உங்கள் முதலீடுகள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் இருக்கும். அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் பல்வேறு திட்டங்களில், ‘பொது வருங்கால வைப்பு நிதி’ (PPF) என்பதும் ஒன்றாகும். சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது ஒரு மிகச்சிறந்த திட்டமாகும். இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம்.
தற்போதைய நிலவரப்படி, PPF கணக்கிற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதற்கான வட்டியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும், PPF கணக்கிற்கு 15 ஆண்டுகள் எனும் ஒரு குறிப்பிட்ட ‘முடக்கக் காலம்’ (Lock-in period) உள்ளது. அதாவது, நீங்கள் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்ய வேண்டும். அந்தக் காலம் முடிந்த பிறகு, நீங்கள் முதலீடு செய்த தொகையுடன் சேர்த்து, அதற்கான வட்டித் தொகையையும் முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். நீண்டகால அடிப்படையில், எவ்வித இடர்பாடுகளும் இன்றி நிலையான வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். மேலும், இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு எவ்வித வரியும் விதிக்கப்படுவதில்லை.
இத்திட்டத்தின் மூலம் வட்டி வாயிலாக ஈட்டப்படும் வருமானத்திற்கும் எவ்வித வரியும் கிடையாது. 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு நீங்கள் பெறும் மொத்தத் தொகைக்கும் (முதலீடு + வட்டி) எவ்வித வரியும் செலுத்தத் தேவையில்லை. இத்திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாகும். நீங்கள் மாதம் தோறும் ரூ. 12,500 வீதம் முதலீடு செய்து வந்தால், 15 ஆண்டுகளின் முடிவில் மொத்தம் ரூ. 22.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக, நீங்கள் மாதம் ரூ. 12,500 வீதம் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். 15 ஆண்டுகளில் உங்கள் முதலீட்டுத் தொகை ரூ. 22.5 லட்சமாக உயர்ந்திருக்கும். இதற்கு 7.1 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தைக் கணக்கிட்டால், 15 ஆண்டுகளில் மட்டும் வட்டித் தொகையாக ரூ. 18.18 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும். ஆகமொத்தத்தில், 15 ஆண்டுகள் நிறைவடைந்ததும் நீங்கள் மொத்தம் ரூ. 40.68 லட்சத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில், இக்கால இடைவெளியிலேயே நீங்கள் கடன் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.
முதலீடு செய்யத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த பிறகு, நீங்கள் கடன் பெறுவதற்கான தகுதி பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, அவசரத் தேவை ஏற்படும்போது, ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
Read More : 9 கோடி பயனர் கணக்குகளை முடக்கிய IRCTC; டிக்கெட் மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை..!



