முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே. அண்ணாமலை, கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.. கட்சியில் இணைந்து ஓராண்டிலேயே, அதாவது 2021-ம் ஆண்டு அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுளுக்கும் மேலாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்..
அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் நோக்கில் அண்ணாமலை நீக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.. ஆனாலும் அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை..
கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி ஆதரவு தர உள்ளதாகவும் கூறப்பட்டது..
இதனிடையே முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது.. இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற சந்தேகம் வலுத்தது..
இந்த சூழலில் தான் கடந்த 1-ம் தேதி டெல்லி சென்றார் அண்ணாமலை.. டெல்லியில் பாஜக தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்தித்து பேசினார்.. அப்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 6 பக்க கடிதத்தை அண்ணாமலை வழங்கினார் என்று கூறப்படுகிறது.. நிதின் நபின், அண்ணாமலையை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது..
இதையடுத்து அமித்ஷாவையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்.. அப்போது எதற்கும் அவசரப்பட வேண்டாம்.. பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.. மேலும் அண்ணாமலை உடன் இறுதிகட்ட சமரச பேச்சுவார்த்தைகளை பாஜக நடத்தி வந்ததாக கூறப்பட்டது. அதாவது அண்ணாமலையை தக்க வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறதாம்.. அண்ணாமலையை பாஜக இழக்கக்கூடாது என பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ் சமிக்ஞை அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது..
ஆனாலும் தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்.. அவரை பாஜகவில் இருக்கும் பட்சத்தில், மீண்டும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பை வழங்கவும் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.. தற்போது தலைவராக இருக்கும் நயினார் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது..
இந்த சூழலில் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் நேற்று மாலை இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அதில் இன்று மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அனைவரையும் சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்..
எனவே அண்ணாமலை டெல்லி தலைமையின் சமரசத்தை ஏற்று பாஜகவிலேயே நீடிப்பாரா..? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என்பதை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : Breaking : காங்கிரஸின் துரோகம்.. ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை.. திமுக புறக்கணிப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!



