கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.. இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பண மோசடி குற்றச்சாடின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.. எனினும் அவர்கள் மீது வழக்குத்தொடர மாநில அரசு அனுமதி வழங்காததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது..
இந்த நிலையில் இந்த பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சிலருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்தது..
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிய அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.. 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. முன்னாள் அமைச்சர் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் அனுமதியை ஆளுநர் தான் வழங்க முடியும்.. எனவே செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.. முதல்வர் ஜோசப் விஜய்யின் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..
முன்னதாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இதே வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரணை நடத்த அப்போதைய திமுக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதி இருந்தது.



