fbpx

Governor: பொன்முடி விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஆளுநர் ரவி…!

தமிழ்நாடு ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும் என பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான பொன்முடி அவர்களை மாநில அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாத போது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் மாநில ஆளுநரின் கடமை ஆகும். ஆனால், தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளுக்கும், முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதே ஆளுநரின் செயலாக இருக்கிறது.

பொன்முடி பதவி ஏற்பு பிரச்சினையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகார வரம்பை மீறுகிறார். இது முதல்வரின் பரிந்துரையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அப்பட்டமாக மீறுகிற நடவடிக்கைகள் ஆகும். பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்சநீதி மன்றம் தடை விதித்திருக்கும் நிலையில்தான், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பதற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை.

மேலும், ஒருவர் குற்றவாளி என்று இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான்” என்கிற சட்டவிதிகளின் அடிப்படையில் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, தமிழ்நாடு ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று க.பொன்முடி அவர்களை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

Vignesh

Next Post

மக்களே உஷார்!… கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Tue Mar 19 , 2024
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டிலில் (Packaged Water) கனிம அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடைகளில் மினரல் வாட்டர் (Mineral Water), பேக்கேஜ்டு வாட்டர் (Packaged drinking water) என இரண்டு வகையான குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும். மினரல் வாட்டர் என்பது சாதாரண வடிகட்டுதல் முறையில் சுத்தகரிக்கப்பட்ட நீரில் தாதுக்கள், சல்பர் […]

You May Like