இன்னும் 10 நாட்கள் பொறுமை காத்தால்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்..! பணம் பெருகும்..!

astro zodiac horoscope

அடுத்த பத்து நாட்களில் செவ்வாய் கிரகம் தனது ராசியை மாற்றவுள்ளது. இது சுக்கிரனின் ஆதிக்கத்திற்குரிய ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளது. இதனால், 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கவுள்ளன. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்..


ரிஷபம்

செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். செவ்வாய் இந்த ராசிக்குள் நுழைவதால், இவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில், இவர்களின் ஆளுமைத் திறன் மேம்படும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான புதிய வழிகளை அறிந்துகொள்வார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவார்கள். தொழில் மற்றும் வேலையில் அபரிமிதமான நன்மைகளைப் பெறுவார்கள்.

கடகம்

செவ்வாய் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவரும். குறிப்பாக, நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் காண்பார்கள். இவர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், வருமானம் இரட்டிப்பாகும். இந்த காலத்தில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

சிம்மம்

செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கும் மிகவும் சாதகமாக அமையும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். வருமானமும் அதிகரிக்கும்; வருமானத்தை உயர்த்துவதற்கான பல வழிகள் அமையும். கடந்த காலத்தில் இழந்த பணத்தை மீண்டும் பெற முடியும்.

மீனம்

இந்தச் செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைத் தரும். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். தொழில் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். இக்காலத்தில் எங்கு முதலீடு செய்தாலும் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் ஆளுமைத் திறனும் மேம்படும்; அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள்.

RUPA

Next Post

16 பேர் பலி.. 37 பேர் காயம்..! போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு..!

Thu Jun 11 , 2026
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவாலகோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 37-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மலிவு விலையில் மாவு, அரிசி, மின்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி சாதாரண குடிமக்கள் அமைதியான வழியில் போராடினர்.. ஆனால் ராணுவம் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஒரு பயங்கரமான சூழலாக மாறியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
pok

You May Like