17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார்..
அப்போது பேசிய அவர் “ மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தைகள் தேர்தலின் மூலம் நிரூபணமாகி உள்ளது. இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் முதல்வர் விஜய் பெற்றுள்ளார்.. கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் மக்களின் பெரும் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டே ஆண்டுகளில் மக்களின் நன்மதிப்பை பெற்று தமிழ்நாட்டின் விஜய் முதலமைச்சராகி உள்ளார். எம்ஜிஆர் 1977-ல் ஏற்படுத்திய புரட்சியை போல் 2026-ல் விஜய் ஏற்படுத்தி உள்ளார்.. பெண்கள் நலன், குழந்தைகள் நலன், மாநில உரிமைகளை முன்னிறுத்தி இந்த ஆட்சி செயல்படும்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஆட்சி நடத்தப்படும். மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் அதிகளவு விவாதம் நடைபெறும் என்று நம்புகிறேன்.. சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை.. அதனை வெளிக்கொண்டு வரும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.. தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகன் மீதும் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. கடந்த ஆட்சியின் முறையற்ற செயல்முறையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..
வரி வருவாயில் கடந்த ஆட்சியில் தமிழகத்தில் திட்டமிடப்பட்ட ஊழல் நடந்துள்ளது. வரும் நாட்களில் வருவாய் இழப்பை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.. டாஸ்மாக்கில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் நிதி அரசிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.. மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள், நிதி பற்றாக்குறையை தாண்டி நிறைவேற்றப்படும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.. கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.. கோவில்கள், பள்ளிகள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது..
தமிழகத்தில் நடந்து வந்த கனிமவளக் கொள்ளையை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருட்கள் தடுப்பு அலகு அமைக்கப்பட உள்ளது.. நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க இந்த அரசு அனுமதி அளிக்கும்..” என்று கூறினார்..
Read More :



