17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகள் தொடரும்.. நதி நீர் இணைப்புக்கு தேவையான நடவடிக்கையை தவெக அரசு மேற்கொள்ளும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.. தமிழகத்தில் அகழாய்வு நடைபெறும் இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை அரசு பின்பற்றும். புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு எதிர்க்கும்.. இரு மொழிக் கொள்கையே அரசின் கொள்கை.. தமிழக அரசு தொடர்ந்து போராடி காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்கும்.. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
சமூகநீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என்ற முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழகை கொண்டு வர தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.. லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றி கழக அரசு உறுதியாக உள்ளது.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரையிலான கூட்டுறவு பயிர்க்கடன் தமிழக வெற்றி கழக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மும்மொழி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதி சுமார் 3000 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.. மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை உடனவடியாக விடுவிக்க வேண்டும்..
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புதிய தொழில் கொள்கை விரைவில் அறிமுகம். தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.. தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
ஏஐ மூலம் அரசுத்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.. நிர்வாக ரீதியில் தாமதம் ஏற்படாமல் ஒப்புதல் அளிப்பதற்கு டிஜிட்டல் முறையில் ஒற்றை சாளர முறை பின்பற்றப்படும்..
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. அடுத்த 5 ஆண்டுகளில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுசூழல் ஏற்படுத்தப்படும்.. தமிழ்நாட்டில் விரைவில் தொழில் முதலீட்டு ஆணையம் அமைக்கப்படும்.. ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி வழங்க முதலீட்டாளர் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
Read More : நிதி பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.. ஆளுநர் உரையில் தவெக அரசு உறுதி..!



