“ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறவிட்டது.. பாய்ண்ட் கிடைக்காமல் பதறும் உதறல்நிதி..” உதயநிதிக்கு தவெக பதிலடி..!

vijay udhayanidhi 1

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசின் ஆளுநர் உரையை கண்டிப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.. இன்றைய முதல்வர் தேர்தலுக்கு முன்பு என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.. பச்சை குழந்தைகள், மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீர வசனம் பேசினார்..எப்போதாவது பேசும் முதல்வர், தான் முதல்வர் என்பதை மறந்து இன்னும் பிரச்சாரம் செய்யும் மோடிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்.. அவர்களின் அமைச்சர்களும் ரீல்ஸ் வெறியில் சுற்றுகின்றனர்.. முதல்வர் விஜய் தனது ஆட்சியை காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏக்களை Panic Buying செய்து கொண்டிருக்கிறார்..


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பெண்கள் பாதுகாப்புக்கும் எந்த ஒரு திட்டமும் இந்த ஆளுநர் உரையில் இல்லை.. இந்த ஆளுநர் உரையை கண்டிக்கிறோம்.. திமுக அரசு கொடுத்த ஆளுநர் உரையை ஆளுநர் ஒருபோதும் வாசித்தது இல்லை.. ஆனால் இன்றைய ஆளுநர் தவெக அரசின் உரையை முழுமையாக வாசிக்கிறார்.. பாஜகவும் – தவெகவும் ஒரு புரிதலுக்கு வந்துள்ளனர்.. திமுகவின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக ஐடி விங் “ தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.

ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது. ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது.

Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர்.

Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார். பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று. சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.” என்று தெரிவித்துள்ளது..

Read More : காங்கிரஸ் தேசிய நிர்வாகி ஸ்ரீநிதி திமுகவில் இணைந்தார்..! தவெகவிடம் காங்கிரஸை அடகு வைத்ததாக குற்றச்சாட்டு..!

RUPA

Next Post

50 மில்லியன் மக்களின் உயிரைப் பறித்த பயங்கரமான எல் நினோ மீண்டும் வந்துவிட்டது..! இந்த முறை எப்படி இருக்கும்..?

Thu Jun 18 , 2026
கடந்த 150 ஆண்டுகளில் மனிதகுலம் பல பெரும் பேரிடர்களைச் சந்தித்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் மற்றும் 1918-19 காலகட்டத்தில் ஏற்பட்ட இன்ஃப்ளூயன்ஸா பெருந்தொற்று ஆகியவை பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அவற்றுக்கு முன்னதாக, 1876 முதல் 1878 வரை ஏற்பட்ட ஒரு பயங்கரமான உலகளாவிய பஞ்சம் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. வெறும் மூன்றே ஆண்டுகளில், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் சுமார் […]
elnino effect

You May Like