காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் நிர்வாகிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..
அந்த வகையில் முதல்வர் விஜய் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. முதன்முறையாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது..
இதையடுத்து காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு உடனடி தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமண்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதன் மூலம் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்தது.
மேலும் முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.. அதே போல் முதல்வர் விஜய் சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த போது ராகுல்காந்தி, சோனியாகாந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிட்டத்தகக்து.
Read More : பெண்களுக்கான அருமையான திட்டம்..! மாதந்தோறும் ரூ. 7,000 கொடுக்கும் மத்திய அரசு..! விண்ணப்பித்தாலே போதும்..!



