Breaking : மேகதாதுவில் அணை கட்டக்கூடாது.. முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது..!

Joseph vijay in assembly

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.. அப்போது பேசிய அவர் “ காவிரி நடுவர் மன்றம் 5.02.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் 16.02.2018 அளித்த தீர்ப்பை மதிக்காமலும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடக அரசு முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் செயலுக்கு இந்த பேரவை கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது..


கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு, தொழில்நுட்பம்,, சுற்றுச்சூழல் என எவ்விவத அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது.. காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரி நீரையும் படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரி படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ கூடுதலாக நீரை பயன்படுத்த இயலாது.. காவிரி பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சனையாகும்..

அதனால் கர்நாடக அரசு, மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையின் வேறு எந்த இடத்திலோ புதிய அணை மற்றும் நீர்த்தேக்க திட்டத்தை படுகை மாநிலங்களின் இசைவின்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறதோ.. மேகதாது அணை திட்டத்தை அனுமதிக்கவோ அல்லது பரிசீலிக்கவொ கூடாது என மத்திய நீர் வளத்துறையையும் இப்பேரவை வலியுறுத்துகிறது..

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை முறியடித்து, விவசாயிகளின் நலனை பாதுகாத்திட தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது என்ற இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.. இதை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் முழு மனதோடு ஆதரிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..   

இதை தொடர்ந்து அனைத்து கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் முதல்வர் விஜய் கொண்ட தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.. அந்த புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை தீர்மானத்தில் இணைக்கப்பட்டது.. இதையடுத்து முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் முழு மனதுடன் வரவேற்பு தெரிவித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது..

Read More : Breaking : இன்ப அதிர்ச்சி..! ஒரே நாளில் ரூ.3,040 குறைந்த தங்கம் விலை..! வெள்ளி ரூ.15,000 சரிவு..! நகைப்பிரியர்கள் ஹேப்பி..!

RUPA

Next Post

டெலிகிராம் மீதான தடை தொடரும்..! மத்திய அரசின் முடிவை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்..!

Fri Jun 19 , 2026
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, 5 நாட்களுக்கு ‘டெலிகிராம்’ (Telegram) செயலிக்கு தடை விதித்த மத்திய அரசின் முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது. தேர்வு தொடர்பான தகவல்கள் கசிவதையோ அல்லது தேர்வு நடைபெறும் நேரத்தில் இந்தச் செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கை நியாயமானது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தடுப்பு […]
telegram ban 2

You May Like