தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.. இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்த நிலையில், இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..
இதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.. அப்போது என்ன பிரச்சனை நடந்தாலும் முதல்வர் விஜய் வாய் திறப்பதில்லை என்று கூறினார்.. அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எங்கள் முதல்வருக்கு எப்போது பேச வேண்டும், என்ன வேண்டும் என்பது தெரியும். கொளத்தூரில் எங்கள் முதல்வர் 5 நிமிடம் தான் பேசினார்.. அதற்கே கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும்..” என்று கூறினார்..
அப்போது முன்னாள் அமைச்சர் சிவசங்கர் குறுக்கிட்டு “ இப்போதும் நாம் பேசுவது விளாத்திக்குளம் சம்பவம் பற்றி.. அதை விட்டுவிட்டு, கொளத்தூரை பற்றி ஏன் பேசுகிறீர்கள்..” என்று கேள்வி எழுப்பினர்..
இதை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று ஆவேசமாக கத்த தொடங்கினர்.. அதற்கு தவெக எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக கத்த தொடங்கினர்.. ஒரு கட்டத்தில் ராயபுரம் தவெக எம்.எல்.ஏ அடிக்க பாய்வது ஓடி வந்தார்.. இப்படி மாறி மாறி ஆவேசமாக பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதை யடுத்து சபாநாயகர் தலையிட்டு இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்தினார்.. தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் “ நீங்கள் பேசுவது போல் எங்களுக்கும் பேச தெரியும்.. எங்களை தூண்டுவது போல் திமுக எம்.எல்.ஏக்கள் ஏதேனும் பேசினால் அதற்கு பதிலடி கொடுப்போம்.. இன்றைய விவாதம் என்னவோ அதை பற்றி மட்டும் பேசுவோம்..” என்று தெரிவித்தார்.. இதையடுத்து ஒருவழியாக இந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்தது..



