அடுத்த வாரம் வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்பட்டிருக்கும். ஜூன் 22 முதல் ஜூன் 25 வரை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். இருப்பினும், ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அவை மூடப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஜூன் 22, 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் செயல்படும். முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 26 அன்று பல நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
அகர்தலா, ஐஸ்வால், பெலாபூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர் மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதே சமயம் அகமதாபாத், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், கவுகாத்தி, கேங்டாக், இம்பால், இடாநகர், ஜெய்ப்பூர், கொச்சி, கோஹிமா, பனாஜி, ஷில்லாங், சிம்லா மற்றும் திருவனந்தபுரம் போன்ற பல நகரங்களில் வங்கிகள் திறந்திருக்கும்.
ஜூன் 27-ஆம் தேதி 4-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூன் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அடுத்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கவுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்வது நல்லது; இல்லையெனில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தேசிய விடுமுறைகள், மாநில விடுமுறைகள் மற்றும் பண்டிகைகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி விடுமுறைகளைத் தீர்மானிக்கிறது. வங்கி விடுமுறைகள் சில சமயங்களில் பொதுவான அரசு விடுமுறைகளுடன் ஒத்துப்போகலாம்.. ஆனால் அவை நகரத்திற்கு நகரம் மாறுபடும். ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதற்கே உரிய விடுமுறைகள் உள்ளன. எனவே, வங்கிக்குச் செல்லும் முன் வாடிக்கையாளர்கள் விடுமுறை விவரங்களைச் சரிபார்ப்பது நல்லது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, அரசு, தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு, பிராந்திய கிராமப்புற மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகள் உட்பட அனைத்து அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.
Read More : ரூ. 20 பிரீமியத்தில் ரூ. 2 லட்சம் காப்பீடு..! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?



