fbpx

DMK | தற்கொலைக்கு முயன்றாரா திமுக எம்.பி.? சீட்டு தராததால் விரக்தியில் எடுத்த முடிவா.? அதிர்ச்சி தகவல் .!

ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் திமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருட தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றவர் கணேசமூர்த்தி.

இந்நிலையில் இன்று காலை இவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் தற்கொலை முயற்சி செய்ததால் காப்பாற்றப்பட்டு குடும்பத்தாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடைபெற இருக்கின்ற 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன அழுத்தத்தில் இருந்து அவர் தற்கொலை முயற்சி செய்திருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக அவற்றிற்கான வேட்பாளர்களையும் அறிவித்தது. கடந்த முறை ஈரோடு பாராளுமன்றத்தில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்ற கணேசமூர்த்திக்கு பதிலாக இந்த முறை ஈரோடு தொகுதியில் போட்டியிட பிரகாஷ் என்பவர் தேர்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Post

கார் டிரைவர் பலியான வழக்கில் ஜாமீனில் விடுதலையான தலைமை காவலர் சஸ்பெண்ட்

Sun Mar 24 , 2024
சென்னை மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தலைமை காவலர் ரிஸ்வான் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). கால்டாக்சி டிரைவரான இவர் கடந்த மார்ச் 21ஆம் தேதி இரவு நேரத்தில் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு, ஒரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு ரோந்து பணியில் […]

You May Like