தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தது.. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “ தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.. ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மின்வெட்டு பிரச்ச்சனையில் பெரம்பூர் தொகுதி முதலிடம். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. மின்சாரம் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய நிலை தவெக ஆட்சியில் இருக்கிறது.. மின் வெட்டு பிரச்சனையால் அண்ணன் திருமாவளவனே பாதிக்கப்பட்டுள்ளார்.. ஆட்சியில் பவர் ஷேரிங் தந்தீர்களே, கூட்டணி கட்சி அலுவலகத்திற்கு பவர் தந்தீர்களா..? ” என்று தெரிவித்தார்..
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், பெரும்பூரில் எத்தனை முறை மின்வெட்டு நடைபெற்றதோ அதனை உடனடியாக சீரமைத்துள்ளோம். சராசரியாக 55 இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் ஒரு மணி நேரத்தில் 35 இடங்களில் சரி செய்யப்பட்டுள்ளது.. கடந்த 15 ஆண்டுகளில் மின்சாரத்துறை எந்த உட்கட்டமைப்பு வசதியும் மேற்கொள்ளவில்லை.. பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது.. மின் வெட்டு தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் மின்வெட்டை சரிசெய்ய 120 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய உதயநிதி “ இதையடுத்து அமைச்சர் நிர்மல் குமாரின் விளக்கத்திற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் பொறுமையாக இருங்கள் என அமைச்சர் சொல்வதை பார்க்கும் இரு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்குமா என்ற சந்தேகம் வருகிறது.. ஆளுநர் உரையின் போது பவர் கட் ஆகவில்லை என பாராட்டலாம்..” என்று தெரிவித்தார்..



