தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் போரூரில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
அப்போது, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய 6 சட்டமன்ற தொகுதியில் எந்த தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்றுத் தருகிறர்களோ, அந்த சட்டமன்றத்தை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்களுக்கு 10 சவரன் நகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
Read More : அசர வைக்கும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு..!!