தொடைநடுங்கி முதல்வரே? ‘Thug Life’ அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் போலீஸ் பின்னால் ஒளிகிறீர்கள்..? திமுக ஐடி விங் கண்டனம்..!

dmk protest

அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற ம் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


இந்த நிலையில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை எழும்பூரில் இன்று திமுக மாணவரணியினர் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

இதையடுத்து திமுக மாணவரணி நிர்வாகிகள் – போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் காவல்துறை வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். சென்னையை போலவே மதுரை, நெல்லை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் திமுக மாணவரணி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக மாணவரணி போராட்டம் மறுக்கப்பட்டதற்கு அக்கட்சியின் ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ இதற்குப் பெயர் பாசிசமா இல்லை பாயாசமா தொடைநடுங்கி முதல்வரே?!

பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அப்பட்டமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அறவழியில் அமைதியான முறையில் போராடத் தயாரான திமுக மாணவர் அணியினருக்கு அனுமதி மறுத்து, அவர்களைக் கைது செய்திருக்கும் தவெக அரசின் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

உங்களின் ‘Thug Life’ அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் இந்த அளவுக்குக் கை நடுங்கி, தொடை நடுங்கிப் போய் போலீஸுக்குப் பின்னால் ஒளிகிறீர்கள்?

ஜனநாயக ரீதியான ஒரு அமைதிப் போராட்டத்தைக் கூட எதிர்கொள்ளத் துணிவில்லாத ஒரு கோழை அரசாங்கம் தமிழ்நாட்டை ஆள்வது வெட்கக்கேடு! அதிகார வெறி கொண்டு நீங்கள் போடும் இந்த சர்வாதிகார ஆட்டத்திற்குத் தமிழ்நாட்டு இளைஞர்களும், மக்களும் வீதியில் இறங்கி மிக விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!” என்று தெரிவித்துள்ளது.

Read More : ஸ்டாலின் சார் என்ன தான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும்.. திமுக 100% துடைத்தெறியப்படப் போவது உறுதி.. தவெக ஐடி விங் பதிலடி..!

RUPA

Next Post

35 பொதுமக்கள் பலி..! ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்..! பதற்றம் அதிகரிப்பு..!

Mon Jun 29 , 2026
ஆப்கானிஸ்தானுக்குள் மீண்டும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது.. நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிய வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸின் பிராந்தியத் தலைமையகத்தை தீவிரவாதிகள் தாக்கிய ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்படும் தீவிரவாதக் குழுக்களே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று இஸ்லாமாபாத் குற்றம் […]
pakistan afghanistan border

You May Like