பொதுமக்களுக்கு குட் நியூஸ்..! CAMS (Public Grievance Portal )அறிமுகம்.. பொதுமக்கள் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய புதிய வசதி..!

CPGRAMS – Mobile App 1024x538 1

பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்காக Public Grievance Portal என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தங்களது புகார்கள் மற்றும் சந்தேகங்களை எளிதாக பதிவு செய்து தீர்வு பெறும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி CAMS இணையதளத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.


தலைமை தணிக்கை இயக்குநரின்கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைத் துறை மற்றும் பால் கூட்டுறவுகளின் தணிக்கைத் துறை ஆகிய ஐந்து துறைகளின் சேவைகளை மேலும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய Public Grievance Portal மூலம் பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் சந்தேகங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காகவும், தங்களின் மனுக்களின் நிலையை கண்காணிப்பதற்காகவும், தேவையான தகவல்களையும் விரைவாகப் பெறுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி மூலம் தணிக்கைத் துறையின் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேலும் வலுப்பெறுவதுடன், புகார் தீர்வு நடைமுறையும் எளிமையாகவும், விரைவாகவும் அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

maha

Next Post

வட்டாச்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனை ..! பணப்பறிமுதல் மற்றும் வழக்குப்பதிவு விசாரணை..!

Sat Jul 18 , 2026
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாச்சியர் அலுவலகங்களில் நேற்று (ஜூலை 17)லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு ,லஞ்சம் வாங்கிய பலர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் அளிக்க வாட்ஸாப் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் நில அளவை போன்ற […]
income tax raid 11zon

You May Like