டெங்கு கொசு ஒழிப்பு மருந்து அடித்தபோது, மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை உப்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன். அதே பகுதியில் ராணி என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து தெளித்து சுகாதார பணியை பேரூராட்சி நிர்வாகம் இறங்கி உள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடித்த நிலையில், அங்குள்ள சாக்கடை கால்வாய் மட்டுமின்றி குடியிருப்புகளுக்குள் அதிக புகை வரும் வகையில் கொசு மருந்துகளை அடித்ததாக தெரிகிறது. அப்பொழுது வீட்டில் இருந்த மோகன் மற்றும் ராணி ஆகிய இரண்டு பேர் அதனை சுவாசித்ததில் இருவருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது
அவர்களை வீட்டிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் இதனை சரியாக கண்காணிக்க தவறி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொசு மருந்து தெளிக்கும் போது சுகாதாரத்துறை அதிகாரிகள் அருகில் இருந்தே எவ்வளவு மருந்துகள் அதில் உட்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். மனிதர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதனை கையாள தவறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
Read More : BREAKING | தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு..! நாளை தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் CM விஜய்..!


