பெயருக்கு பதில்… அசிங்கப்படுத்திய உணவகம்!. பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்!.

bengalorehotel

பெங்களூருவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக அவரது உடல் அமைப்பை விவரித்து பில்லில் அச்சிடப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


நடந்தது என்ன?

பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ‘சப்கோ தி கிராப்டரி’ (Subko The Craftery) என்ற உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு உணவை உட்கொண்டுவிட்டு பில்லைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். பில்லில் வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக “Little fat black shirt” (சிறு குண்டான கருப்புச் சட்டை) என்று அச்சிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு மனவேதனை அடைந்த அந்த நபர், தனது பெயரையோ அல்லது மேசை எண்ணையோ குறிப்பிடுவதற்குப் பதிலாக, தனது உடல் எடையையும் தோற்றத்தையும் கேலி செய்யும் வகையில் இதனைப் பயன்படுத்தியதைக் கேள்வி எழுப்பி ரெட்டிட் தளத்தில் பகிர்ந்தார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதை அடுத்து, இது உடல் அமைப்பை கேலி செய்யும் செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானதை அடுத்து, ‘சப்கோ காபி ரோஸ்டர்ஸ்’ நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “சில விஷயங்களை நாம் அமைதியாகச் சரி செய்வோம், ஆனால் சிலவற்றை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ள வேண்டும். மௌனமாக இருப்பதுதான் இதுபோன்ற கலாச்சாரம் வளர வழிவகுத்துவிடும்” என்று குறிப்பிட்டது.

மேலும், “உடல் எடை கேலி என்பது எந்த வடிவத்திலும், எப்போதுமே தவறானது. இதில் விதிவிலக்கே கிடையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்ட நிறுவனம், தங்களது முறையீட்டுப் பிரிவின் (ICC) மூலம் உரிய விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

இணையத்தில் பலரும் உணவகம் தவறை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டதை வரவேற்றாலும், வாடிக்கையாளர்களை இதுபோன்ற வார்த்தைகளால் விவரிப்பது அநாகரிகமானது எனத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

சட்டசபையில் எப்படி பேசணும்னு தெரியாதா..? தகாத வார்த்தைகளால் வசைபாடும் மாஜி அமைச்சர்கள்..!! அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

Sun Aug 23 , 2026
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை உறுப்பினர் கே.என். நேரு தான் ரேஷன் அரிசியையே உணவாக உட்கொள்வதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், நடைமுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தகுதியற்ற முறையில் ரேஷன் அரிசி விநியோகிக்கப்படுவதாகப் பரவலான புகார்கள் எழுந்துள்ளன என அவர் குறிப்பிட்டார். இத்தகைய குறைகளைக் களைந்து, பொதுமக்களுக்கு உயர்தரமான உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்குவதற்கு முதலமைச்சர் விஜய் […]
Minister Ramesh 2026

You May Like