என்ன காப்பாத்துங்க..!! ஆட்டோவில் அலறிய 17 வயது சிறுமி..!! பாலியல் தொழிலில் 10 பெண்கள்..!! சென்னை பங்களாவில் பயங்கரம்..!!

Sex 2025 1

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்களை சென்னைக்குக் கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சர்வதேசத் தொடர்புகொண்ட அதிர்ச்சி கும்பலை சென்னை பெருநகரக் காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதியில் வேகமாக சென்ற ஆட்டோ ஒன்றில் இருந்து, 17 வயது சிறுமி ஒருவர் “என்னை காப்பாற்றுங்கள்” என்று கூச்சலிட்டபடி தப்பிக்க முயன்றார். இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட அப்பகுதி பொதுமக்கள், சினிமா பாணியில் ஆட்டோவை விரட்டி மடக்கிப்பிடித்து அச்சிறுமியை மீட்டதுடன், அவரை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


காவல்துறையினரின் தீவிர விசாரணையில், அச்சிறுமி கூறிய திடுக்கிடும் தகவல்கள் போலீசாரையே அதிர வைத்தன. வெளிமாநிலங்களில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் அப்பாவி இளம் பெண்களைத் திட்டமிட்டு வலைவீசிப் பிடித்து, சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் அடைத்து வைத்து, மிரட்டி கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலமானது. சிறுமி அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராமாபுரம் பங்களாவில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். அங்கு சட்டவிரோதமாகச் சிறை வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் உட்பட 10 இளம் பெண்களைப் பாதுகாப்புடன் மீட்டனர்; இதில் வங்கதேச நாட்டை சேர்ந்த இரு பெண்களும் அடங்குவர்.

இந்த கொடூர பாலியல் தொழில் கும்பலின் பிரதான தலைவியாகச் செயல்பட்டு வந்த ரியா என்ற பெண், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், சென்னையில் இந்த நெட்வொர்க்கிற்கு பங்களா வாடகைக்கு எடுத்தது முதல் பெண்களைக் கண்காணிப்பது வரை உடந்தையாகச் செயல்பட்டு வந்த அவரது கூட்டாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : FQL ஆன்லைன் நிதி மோசடி..!! வீட்டில் வெடித்த சண்டை..!! கொடிய விஷ செடியை அரைத்துக் குடித்த பெண்..!! திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

Next Post

தமிழகத்தில் பக்தர்களை வியக்க வைக்கும் கோயில்கள்..!! இங்கு போயிட்டு வந்தாலே நீங்க நினைச்சது நடக்கும்..!!

Thu Sep 3 , 2026
தமிழ்நாட்டில் உள்ள பழமையான திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் தமக்கே உரிய தனித்துவமான புராணப் பின்னணியையும், கண்களை வியக்க வைக்கும் சிற்பக்கலை மற்றும் ஆகம அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் மெய்சிலிர்க்கும் தமிழக கோயில்களின் தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம். விரற்கடை உயர லிங்கம் (தேனுபுரீசுவரர் கோயில்): செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள இத்தலத்தில், மூலவர் தேனுபுரீஸ்வரர் வெறும் ஒரு ஜான் உயரமும், மூன்று விரற்கடை கனமும் கொண்ட மிகச் சிறிய […]
temple2 1

You May Like