ஒரே போட்டியில் 3 சாதனைகள்… மிதாலி, சமாரி, ஹர்மன்பிரீத்தை முந்திய ஸ்மிருதி மந்தனா!. அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

Smriti Mandhana 30kb

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை T20 போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.


முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜின் (10,868 ரன்கள்) சாதனையை முறியடித்து, தனது மொத்த ரன்களை 10,880 ஆக உயர்த்தியுள்ளார் ஸ்மிருதி. மேலும், சர்வதேச அளவில் தனது 18வது சதத்தைப் பதிவு செய்து, மெக் லானிங்கை (17 சதங்கள்) முந்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:

ஸ்மிருதி மந்தனா – 10,880 ரன்கள்

மிதாலி ராஜ் – 10,868 ரன்கள்

சூசி பேட்ஸ் (நியூசிலாந்து) – 10,740 ரன்கள்

சார்லோட் எட்வர்ட்ஸ் ( இங்கிலாந்து) – 10,273 ரன்கள்

ஸ்டாஃபனி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்) – 10,007 ரன்கள்.

இப்போட்டியில் அவர் அடித்த 124 ரன்கள் மூலம், மகளிர் T20 ஆசிய கோப்பை வரலாற்றில் தனிநபர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் என்ற புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். இதற்கு முன் இலங்கையின் சமாரி அதபத்து மலேசியாவிற்கு எதிராக அடித்த 120* ரன்களே சாதனையாக இருந்தது.

இதேபோல், ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டதன் மூலம், இந்திய மகளிர் T20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். தற்போது 95 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கும் அவர், ஹர்மன்பிரீத் கவுரின் (89 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவின் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 193 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாங்காங் அணியைக் கட்டுப்படுத்தி, இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஹாங்காங் அணி டாஸ் வென்று பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய தரப்பில் ஸ்மிருதி மந்தனா-ஷபாலி வா்மா களமிறங்கினா். தொடக்கம் முதலே இருவரும் இணைந்து அதிரடியாக பந்துகளை விளாசினா். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சோ்ந்து 74 ரன்களை சோ்த்தனா். ஷபாலி 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசி அவுட்டானாா். பிரதிகா ரவால் 10, ரிச்சா கோஷ் 11, ஹா்மன்ப்ரீத் கௌா் 10 ரன்களுடன் நடையைக் கட்டினா்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 7 சிக்ஸா், 14 பவுண்டரியுடன் 64 பந்துகளில் 124 ரன்களை சோ்த்தனா். ஃபுல்மாலி 2, தீப்தி சா்மா 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா். இந்தியா 193/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 193/5 ரன்களைக் குவித்தது.

194 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணியினா் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினா். அந்த அணியில் அதிகபட்சமாக நடாஷா மைல்ஸ் 15, மரினா லேம்ப்லௌ 14 ரன்களை எடுத்தனா். அந்த அணி 16.2 ஓவா்களில் 56/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பௌலிங்கில் இந்திய தரப்பில் தீப்தி சா்மா 3, நந்தனி சா்மா, ஸ்ரீ சரணி, பிரேமா ரவாத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ஹாங்காங் சீன அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்றது. இதன் மூலம் இந்திய அணை, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

1newsnationuser5

Next Post

பேரிடர், விவசாயத்திற்கு இனி பயமில்லை; கம்பீரமாய் விண்ணில் பாய்ந்த GSLV-F17 ராக்கெட்!. இஸ்ரோவின் விண்வெளிப் பயணம் வெற்றி!

Fri Sep 4 , 2026
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நள்ளிரவு 2:55 மணியளவில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியிலும், 51.7 மீட்டர் உயரமும் 420 டன் எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட், நள்ளிரவு வானத்தைப் பிளந்துகொண்டு கம்பீரமாக விண்ணை நோக்கிப் […]
ISRO GSLV F17 mission successful 30kb

You May Like