அடேங்கப்பா!. ஒவ்வொருக்கும் ரூ. 4.76 லட்சம் பண மழை!. அமெரிக்க வாக்காளர்களை குஷிப்படுத்திய டிரம்ப்!. தேர்தல் வாக்குறுதியில் அதிரடி அறிவிப்பு!.

trump 4

வரவிருக்கும் 2026 இடைத் தேர்தலில் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றினால், அமெரிக்காவில் உள்ள 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் $5,000 ரொக்க பணப் பரிசு (சுமார் ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி வாக்குறுதியளித்துள்ளார்.


டெக்சாஸ் மாநிலம் டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டில் புதன்கிழமை உரையாற்றிய டிரம்ப், தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் மிகச் சிறப்பாகச் செயல்படுவதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்தார். நாடு அதிக லாபம் ஈட்டுவதாகவும், அந்தப் பொருளாதார லாபங்களை நேரடியாக அமெரிக்க மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்புக்கு சில நிபந்தனைகளும் உள்ளன. குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் லாபப் பகிர்வு ஊக்கத்தொகையை போல் வழங்கப்படும் இந்தத் தொகையை, அமெரிக்காவிற்குள்தான் செலவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்தத் தொகை எங்குமிருந்து நிதியளிக்கப்படும், எப்போது வழங்கப்படும் அல்லது எந்த மாதிரியான நடைமுறை மூலம் விநியோகிக்கப்படும் என்பது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ திட்டமோ அல்லது விளக்கமோ உடனடியாக வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள கோடிக்கணக்கான தகுதியான குடிமக்களுக்கு இந்தத் தொகையை வழங்குவது கிட்டத்தட்ட $1 டிரில்லியனுக்கும் (ரூ. 9.52 லட்சம் கோடி) அதிகமான மாபெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களைக் கவரும் நோக்கில் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் மற்றும் சட்டப்பூர்வ அனுமதி தேவையா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த காலங்களிலும் சில நேரடிப் பணப் பலன்களை அவர் அறிவித்திருந்தாலும், தற்போதைய இந்த $5,000 அறிவிப்பு நாட்டின் அனைத்து வயது வந்த குடிமக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

1newsnationuser5

Next Post

அதிமுகவுக்கு செக்; திமுகவுக்கு ஷாக்!. ராஜினாமா செய்த 2 பெண் வேட்பாளர்களை களமிறக்கிய தவெக!. முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!.

Thu Sep 10 , 2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் […]
by election tvk candidates 30kb

You May Like