ஆபாசம், அவதூறுதான் திமுகவின் அரசியல் ஆயுதம்..!! வார்த்தைகளை அளந்து பேசுங்கள்..!! திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..!!

tvk ramesh

ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எதுவும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்கள் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்படையாக காட்டுகிறது.

அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது. எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. எங்கள் மாண்புமிகு முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிடக் கூடாது. எனவே, வார்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால், திமுகவினர் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால், அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

Read More : தாமதமாகும் பென்ஷன் தொகை..!! என்ன காரணம்..? எப்போது பணம் கிடைக்கும்..? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

Next Post

தூக்கக் கலக்கத்தில் லாரி ஓட்டிய டிரைவர்..!! 50 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு..!! பரமக்குடியில் கோர விபத்து..!!

Sat Sep 12 , 2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிசேரி பகுதியில், லாரி மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணியைச் சேர்ந்த கேசவன் என்பவர், தனக்குச் சொந்தமான செம்மறி ஆடுகளைத் தனது சொந்தக் கிராமத்திற்கு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி கருவேல மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து […]
Goat 2026

You May Like