அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அப்பு என்கிற விநாயக வேல் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை .
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்கும் வகையில், வருமான வரித் துறை கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அப்பு என்கிற விநாயக வேல் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி கிராப்பட்டியில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை இன்று நிறைவு பெற்றது. கடந்த 5ஆம் தேதி இரவு சோதனை தொடங்கிய நிலையில் இன்று அதிகாலை சோதனை நிறைவு பெற்றது. சோதனையின்போது, கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.