fbpx

விவசாயிகளே..!! ரூ.2,000 எப்போது உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் தெரியுமா..? வெளியான குட் நியூஸ்..!!

விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 17-வது தவணை எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ. 6000 கிடைக்கும். இந்த பணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என 3 தவணைகளில் கிடைக்கும்.

இந்நிலையில், 16-வது தவணைத் தொகை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி வெளியிட்டார். தற்போது 17-வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 17-வது தவணை மே கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தவணைகளை தொடர்ந்து பெற இ-கேஒய்சி முடிப்பது கட்டாயம் ஆகும். அப்படி செய்யாதவர்கள் உடனே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More : தப்பித்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!! அப்செட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்..!!

Chella

Next Post

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா மனு.. நீதிமன்றத்தில் தாக்கல்..!

Mon Apr 8 , 2024
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ந் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா […]

You May Like