தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்..!! அக்டோபர் 2ம் தேதி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் துவக்கம்..!! வெளியானது அறிவிப்பு..!!

TN Bus 2025 1

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை உறுதிசெய்யும் தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ‘வெற்றிப் பயணம்’ திட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப். 21) முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, காந்தி ஜெயந்தியான வரும் அக்டோபர் 2-ஆம் தேதி இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்பட்டு வரும் மொத்தமுள்ள 18,413 பேருந்துகளில், சுமார் 69 சதவீதப் பேருந்துகள், அதாவது 12,692 பேருந்துகள் இந்த ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் மகளிருக்காக இயக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் பெண் பயணிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் உள்ள பெண்களுக்கும் பொதுப் போக்குவரத்து வசதி எளிமையாகவும் கட்டணமின்றியும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, உயர்கல்விக்காக நெடுந்தொலைவில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், தினசரி பணிக்குச் செல்லும் உழைக்கும் பெண்கள் மற்றும் மருத்துவம், அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணிக்கும் தாய்மார்கள் எவ்விதப் பொருளாதாரச் சுமையுமின்றி அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க முடியும். அடித்தட்டு பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உயர்த்தும் இந்தத் திட்டம், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “எங்களை விட்டுடுங்க…” நடுரோட்டில் கதறிய சிறுமி!. பீகார் கும்பல் அராஜகத்தின் கொடூரம்!. பதறவைக்கும் காட்சி!

Next Post

BREAKING | தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடையில்லை..!! சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி விளக்கம்..!!

Mon Sep 21 , 2026
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சேவல் சண்டை நடத்தத் தடை விதித்து தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாரம்பரியக் கோயில் திருவிழாக்களின்போது வழக்கம் போல சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரியும், ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு […]
Seval 2026 1

You May Like