வானை ஆளும் ராஜா!. உலகின் சிறந்த விமான நிறுவனம் இதுதான்!. பயணிகளின் ஆல்-டைம் ஃபேவரிட்!

சர்வதேச விமானப் போக்குவரத்து தரவரிசை அமைப்பான ‘ஸ்கைட்ராக்ஸ்’ (Skytrax) வழங்கும் 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ உலகின் சிறந்த விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்கள்


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines)

கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways)

கேதே பசிபிக் (Cathay Pacific)

ஏ.என்.ஏ ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA All Nippon Airways)

டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines)

எமிரேட்ஸ் (Emirates)

ஏர் பிரான்ஸ் (Air France)

ஹைனான் ஏர்லைன்ஸ் (Hainan Airlines)

ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines)

கொரியன் ஏர் (Korean Air) இடம்பெற்றுள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் ஈவிஏ ஏர் (EVA Air), குவாண்டாஸ் ஏர்வேஸ் (Qantas Airways), ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் (STARLUX Airlines), லுஃப்தான்சா (Lufthansa), சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் (Saudi Arabian Airlines), ஐபீரியா (Iberia), ஏர் கனடா (Air Canada), வெர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic), ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (Swiss International Air Lines) மற்றும் தாய் ஏர்வேஸ் (Thai Airways) இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூடுதல் விருதுகள்: ஸ்கைட்ராக்ஸ் வரலாற்றில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் மிகச்சிறந்த விமான நிறுவனத்திற்கான விருதை வெல்வது இது 6-வது முறையாகும். உலகின் சிறந்த எகானமி கிளாஸ் (World’s Best Economy Class) விருதையும், சிறந்த எகானமி கிளாஸ் உணவு சேவை (World’s Best Economy Class Onboard Catering) விருதையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தட்டிச்சென்றுள்ளது.

இதுகுறித்து ஸ்கைட்ராக்ஸ் முதன்மை செயல் அதிகாரி (CEO) எட்வர்ட் பிளைஸ்டெட் கூறுகையில், “2026-ஆம் ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு வாழ்த்துகள். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வழங்கி வரும் சேவை மற்றும் அனுபவத்தின் உயர் தரத்தையே இந்த வெற்றி பிரதிபலிக்கிறது” எனப் பாராட்டியுள்ளார்.

2026 வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் விழா, செப்டம்பர் 18, 2026 அன்று லண்டனில் உள்ள லேங்ஹாம் ஹோட்டலில் (Langham Hotel) கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு விமான நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று விருதுகளைப் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    1newsnationuser5

    Next Post

    ஒரே ஆண்டில் ரூ.2,490 கோடி இழப்பு!. ஆனாலும் குறையாத கெத்து!. இந்தியாவின் டாப் பணக்கார நடிகர் ஷாருக்கான் தான்!.

    Thu Sep 24 , 2026
    சமீபத்தில் வெளியான ‘ஹூருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026’-ல், பாலிவுட்டின் ‘பாட்ஷா’ ஷாருக்கான் மீண்டும் இந்தியாவின் மிகப்பணக்கார நடிகராக முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டபோதிலும், இந்திய திரையுலகின் மிகப்பணக்கார நடிகர் என்ற தனது இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.10,000 கோடியாகக் குறைந்துள்ளது. […]
    Shah Rukh Khan 30kb

    You May Like