ஒரே ஆண்டில் ரூ.2,490 கோடி இழப்பு!. ஆனாலும் குறையாத கெத்து!. இந்தியாவின் டாப் பணக்கார நடிகர் ஷாருக்கான் தான்!.

Shah Rukh Khan 30kb

சமீபத்தில் வெளியான ‘ஹூருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026’-ல், பாலிவுட்டின் ‘பாட்ஷா’ ஷாருக்கான் மீண்டும் இந்தியாவின் மிகப்பணக்கார நடிகராக முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டபோதிலும், இந்திய திரையுலகின் மிகப்பணக்கார நடிகர் என்ற தனது இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.


கடந்த ஆண்டு ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.10,000 கோடியாகக் குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் இவரது சொத்து மதிப்பில் ரூ.2,490 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், திரைப்படங்கள் மட்டுமின்றி ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனம் மற்றும் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ ஐபிஎல் அணி உள்ளிட்ட வெற்றிகரமான தொழில்துறை முதலீடுகள் மூலம் அவர் இப்போதும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற நடிகர்களான அமிதாப் பச்சன் ரூ.4,000 கோடி சொத்து மதிப்புடனும், சல்மான் கான் ரூ.3,000 கோடி சொத்து மதிப்புடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ரூ.2,500 கோடி சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதே சமயம், கடந்த முறை பட்டியலில் இருந்த நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் ஆகியோர் இம்முறை இடம்பெறவில்லை.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ (King) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 24, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பெரிய திரையில் அறிமுகமாகிறார். மேலும், இதில் அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடிக்கின்றனர்.

1newsnationuser5

Next Post

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு..!! எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் சும்மா விடக் கூடாது..!! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!

Thu Sep 24 , 2026
ஜெம் வீரமணிக்கு மீதான பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் […]
ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

You May Like